சிவகார்த்திகேயன் – ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மான் கராத்தே’.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் இணை இயக்குனராக இருந்த திருக்குமரன் இயக்குகிறார். ஏ.ஆர். முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதுகிறார்.
இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நாயகனான சிவகார்த்திகேயன் இப்படத்தில் பீட்டர் என்ற ‘பாக்சர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகா ‘யாழினி’ என்ற அழகான தமிழ்ப் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சாதாரண ‘ஒல்லிபிச்சான்’ , எப்படி ‘பாக்சர்’ ஆகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். கூடவே, காதலிலும் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.
2014ல் சிவகார்த்திகேயனின் முதல் படமாக வெளிவர உள்ளது இந்த ‘மான் கராத்தே’.