59 வயதில் சத்யராஜின் ஆசை…

sathyaraj 2612நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்றும்  நிலையான இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் சத்யராஜ்.

அவர் நடித்த படங்களை ரீமேக் செய்தால் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று,  சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் சத்யராஜ்.

“நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’ படத்தின் கதாபாத்திரத்திற்கு விஜய் மிகவும் பொருத்தமாக இருப்பார். ‘மக்கள் என் பக்கம்’ கதாபாத்திரத்திற்கு அஜித்தும், ‘கடலோரக் கவிதைகள்’ பட கதாபாத்திரத்திற்கு கார்த்தியும், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ கதாபாத்திரத்திற்கு சூர்யாவும், ‘அண்ணா நகர் முதல் தெரு’ கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயனும் நடித்தால் பொருத்தமாக இருப்பார்கள்.

ஆனால், ‘வேதம் புதிது’ கதாபாத்திரத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அந்த படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு வயது 32. ஆனால், கதாபாத்திரத்தின் வயது 60. இப்போது எனக்கு 59 வயதாகிறது, அதனால் அந்த கதபாத்திரத்தை இப்போது மீண்டும் நான் ஏற்று நடித்தால் பொருத்தமாக இருக்கும், ” என்று பதிலளித்துள்ளார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த ‘வேதம் புதிது’ பாலு கதாபாத்திரத்தை  மறக்க முடியுமா ?

தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றென முத்திரை பதித்த படமாச்சே…

Read Previous

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’ கதை…

Read Next

2013-ல்- நா.முத்துக்குமார் ஹிட்ஸ்…