இந்த ஆண்டின் ‘பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ’ சிவகார்த்திகேயன்…

sivakarthikeyan-31122013ம் ஆண்டில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் வெற்றிப் படங்களின் விகிதம் குறைவுதான், தோல்விப் படங்களின் விகிதம்தான் அதிகம்.

அதே சமயம் இந்த ஆண்டில் எதிர்பாராத விதத்தில் இரு ஹீரோக்கள் பாக்ஸ் ஆபிஸ்ஸிலும் சரி, ரசிகர்களிடத்திலும் சரி நல்ல பெயரைப் பெற்றார்கள்.

அவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன், மற்றொருவர் விஜய் சேதுபதி.

சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய மூன்று படங்களுமே மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. மற்ற மாநிலங்கள் வசூல், வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை ஆகியவை தனி.

படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் செம லாபத்தை அந்த படங்கள் அள்ளிக் கொடுத்துள்ளதாம்.

விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும் , விமர்சகர்களிடம் நல்ல படமாகவும் பெயரைப் பெற்றது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மிகப் பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், விஜய் சேதுபதியின் நடிப்பை ‘ஹேப்பி’ என்றே சொல்ல வைத்தது.

அடுத்த ஆண்டிலும் இவர்களது வெற்றிப் பயணம் தொடரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் நாயகர்களாக மாறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Read Previous

மலையாளப் படத்தில் சந்தானம்…

Read Next

‘ஜில்லா’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…