கடந்த ஆண்டு வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார், தற்போது தமிழில் ‘கோச்சடையான்’, ‘நிமிர்ந்து நில்’ படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் அதிக அளவில் பாராட்டுக்களைப் பெற்ற படமாக அமைந்தது.
சமீபத்தில் மிஷ்கின் , சரத்குமாரை சந்தித்து பேசியிருக்கிறார். இருவரும் புதிய படம் ஒன்றில் இணைவதைப் பற்றியும் விவாதித்திருக்கிறார்கள். மிஷ்கின் சொன்ன கதை சரத்குமாருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.
இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.