‘வீரம்’ படத்தில் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் கூட அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்.
அஜித்தின் சண்டைக் காட்சிகள் படத்துக்குப் படம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். அதில் அவருடைய ஈடுபாடு அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம்.
‘ஆரம்பம்’ படத்தில் கூட கார் மீது தாவும் காட்சியில் அஜித்துக்கு அடிபட்டு அந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது ‘வீரம்’ படத்திலும் ‘டூப்’ எதற்கு நான்தானே பேர் வாங்கப் போகிறேன், நானே நடிக்கிறேன் , ‘டூப்’ பா நடிக்கிறங்களுக்கு என்ன அடிபடுமோ அதேதான எனக்கும் நடக்கும். பரவாயில்லை, என ரிஸ்க்கான காட்சிகளில் அசத்தியிருக்கிறாராம்.
இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சில்வா, விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ படத்திற்கும் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
ஒரே நேரத்தில் ‘தல, தளபதி’ படங்கள் ரிலீஸ் ஆகறதுல அவருக்குதான் டென்ஷன் அதிகம்.
எந்த படத்துல ‘ஃபைட்’ சூப்பரா இருக்குன்னு ரசிகர்கள் போட்டி போட ஆரம்பிச்சிடுவாங்க…