பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார்.
முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன.
இப்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.
இந்த படப்பிடிப்பில் சிம்பு வரும் 9ம் தேதி முதல் கலந்து கொள்கிறார் என இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
அந்த நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ படத்தின் நாயகனான சிம்பு அதிகம் எதிர்பார்ப்பார்.
சீக்கிரமா படத்துக்குப் பேர் வைங்க…பாண்டிராஜ் படம், சிம்பு படம்-னு எத்தனை முறைதான் மாத்தி மாத்தி எழுதறது…