ஹீரோக்களை நம்பி படங்கள் இல்லை – விஷால் பட இயக்குனர்

nasim newsவிஷால், லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படமான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்கி வருபவர் திரு.

இவர் இதற்கு முன் இயக்கிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர்’ ஆகிய இரண்டு படங்களுமே சரியாக ஓடாத படங்கள்.

அப்படியிருந்தும் தொடர்ந்து இவருக்கு விஷால் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

அதற்கு பதிலளித்த இயக்குனர் திரு, “ பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி இது. நண்பனாக இருந்தால் பணம் கொடுத்து உதவலாம். படம் கொடுத்து உதவுவார்களா. இந்த படத்தின் கதை பிடித்துத்தான் விஷால் நடிக்கிறார்.

இப்போதெல்லாம் ஹீரோக்களை மட்டுமே முன்னிறுத்தும் படங்கள் ஓடுவதில்லை. அப்படிப்பட்ட போக்கு மாறி விட்டது. ‘பாண்டிய நாடு’  படத்திற்குப் பின் விஷால் புது ரத்தம் பாய்ச்சிய மனிதராக மாறி விட்டார்.

லட்சுமி மேனனுக்கு நல்ல முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம். அதனால்தான், கதையின் சூழல் கருதி முத்தக் காட்சியிலும் நடிக்க சம்மதித்து நடித்துள்ளார்.

இப்படம் யதார்த்தம் மீறாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம், ” என்கிறார் இயக்குனர் திரு.

Read Previous

‘வீரம்’ வெற்றி – ஒரு குடும்பத்தில் வந்த மகிழ்ச்சி…

Read Next

குலுமனாலியில் ‘புறம்போக்கு’ ஆரம்பம்…