யு டிவி மற்றும் பைனரி பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடிக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு குலுமனாலியில் ஆரம்பமானது.
இயக்குனர் அமீர் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
‘இயற்கை, ஈ, பேராண்மை’ ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் இது.
இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா, ஷாம் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ஷாம் நாயகனாக நடித்த ‘உள்ளம் கேட்குமே’ படத்தில்தான் ஆர்யா இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார்.
‘கோ’ படத்திற்குப் பிறகு ‘அன்னக்கொடி’ என்ற மாபெரும் தோல்விப் படத்தில் நடித்த கார்த்திகா, இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘கோ’ வெற்றிக்குப் பிறகு அவர் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது.
இன்றைய காலகட்டத்தில் மூன்று ஹீரோக்கள் ஒன்றாக நடிக்கும் படம் என்பதாலும், எஸ்.பி.ஜனநாதன், ஏதாவது ஒரு சமூகக் கருத்தை மையமாக வைத்து எடுப்பார் என எதிர்பார்ப்பு இருப்பதாலும், ‘புறம்போக்கு’ என்ற தலைப்பு இருப்பதாலும் இப்படத்திற்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.