‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் முன்னாள் காதல் ஜோடிகளான சிம்பு – நயன்தாரா இருவரும் சேர்ந்து நடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதனிடையே, சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் மீண்டும் சண்டை எனவும், அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு கூட தடைபட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால், த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியில் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் நெருக்கமாக இருந்த ஃபோட்டோ வெளியாகிறது. இதனால், சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று செய்தி பரவியது.
இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் நயன்தாரா மறுத்துள்ளார்.
“சிம்புவுடன் எனக்கு எந்த உறவும் இல்லை. அவரை த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியில் சந்தித்தேன் அவ்வளவுதான். அங்கும் கூட அவருடன் கொஞ்ச நேரம் கூட இருக்கவில்லை,” என தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
‘இது நம்ம ஆளு’ படத்தோட பேரு போகப் போக ‘இது வேற ஆளு’-ன்னு மாறினாலும் ஆச்சரியப்படறதிக்கில்லை.