ஃபோட்டோ விவகாரம் – ஸ்ருதிஹாசன் வருத்தம்…

shruti haasan newsஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிகரமான ஃபோட்டோக்கள் கடந்த வாரம் வெளியாகி மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

‘எவடு’ என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஸ்ருதிஹாசன் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடனமாடிய புகைப்படங்கள் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகின.

அந்த புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாதென ஸ்ருதி ஹாசன் நிபந்தனை விதித்திருந்தாராம். ஆனால்,  அதையும் மீறி அந்த புகைப்படம் வெளியாகிவிட்டது.

இது சம்பந்தமாக ஸ்ருதிஹாசன் ஆந்திர காவல்துறையில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சில புகைப்படக்காரர்களை காவல்துறையினர் அழைத்து விசாரித்தும் உள்ளனர்.

புகைப்படங்கள் வெளியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ருதி ஹாசன், “சினிமாவில் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள். நல்லவர்களைப் பற்றியும், நல்ல விஷயங்களைப் பற்றியும்தான் நான் கவனித்தில் கொள்வேன்,” என வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Read Previous

‘கோச்சடையான்’ சம்பாதித்த 100 கோடி…

Read Next

பிரசாந்துடன் நடிக்கும் நர்கீஸ் பக்ரி…

Most Popular