விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா மற்றும் பலர் நடிக்க சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு’ திரைப்படம் 2012ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார். தற்போது சுந்தர் .சி இயக்கி விரைவில் வெளிவர உள்ள ‘அரண்மனை’ படத்தைத் தயாரித்துள்ள விஷன் ஐ குளோபல் மீடியாஸ் பட நிறுவனம் ‘கலகலப்பு 2’ படத்தையும் தயாரிக்க உள்ளது.
சுந்தர் .சி சொன்ன நகைச்சுவையான கதை, திரைக்கதை தயாரிப்பாளர்களுக்கு பிடித்துப் போகவே அவருடைய இயக்கத்திலேயே அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டனர்.
இந்த படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க உள்ளனர். பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்தோடு ஜீவா நடிக்கும் மற்றொரு படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
‘அரண்மனை’ படத்திற்குப் பிறகு விஷால், ஹன்சிகா நடிக்கும் படம் ஒன்றை சுந்தர் .சி இயக்க உள்ளார். இந்த படத்திற்குப் பிறகு ‘கலகலப்பு 2’ தயாராகும் எனத் தெரிகிறது.