ஜோதிகா மீண்டும் நடிக்க வரப் போகிறார் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ‘பசங்க’ பாண்டிராஜ் அடுத்து சிறுவர், சிறுமியர்களை வைத்து இயக்கப் போகும் படத்தில்தான் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள்.
அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அந்தப் படத்தை சூர்யா, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2 டி என்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்க உள்ளார். அதோடு, ஜோதிகாவுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
பாண்டிராஜ் சொன்ன கதையைக் கேட்டு சூர்யாவும், ஜோதிகாவும் பிரமித்துப் போய்விட்டார்களாம். அதனால்தான், திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என இருந்த ஜோதிகாவும் மனம் மாறி நடிக்க சம்மதித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு முன்னதாகவே பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.