சலீம் – சங்கடத்தில் சிக்கிய இயக்குனர்…

Salim_00018இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படமான ‘சலீம்’ இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதற்குள்ளாகவே படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான பேச்சுக்கள் திரையுலகத்தைச் சுற்றி வருகிறதாம்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக நிர்மல் குமார் என்பவர் அறிமுகமாகிறார். ஆனால், அறிமுக இயக்குனர் என்பதால் அவரை எந்த வேலையையும் செய்யவிடாமல் படத்தின் நாயகனான விஜய் ஆண்டனியே செய்துவிட்டாராம். படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர் வேறு, இயக்குனர் வேறு என்ன சொல்ல முடியும்.

இதனிடையே படத்தைப் பார்த்த பலரும் அதிர்ந்து போயுள்ளனர். விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்திலாவது விறுவிறுப்பான திரைக்கதை ரசிக்க வைத்தது. ஆனால், இந்த படத்தில் இப்படி அதிர வைத்துள்ளார்களே என ஆடிப் போய்விட்டார்களாம். எந்த ஒரு காட்சிக்கும் சம்பந்தமேயில்லாமல் ஏனோ, தானோவென்று நகர்கிறதாம் படம். இதை படக்குழுவைச் சேர்ந்த ஒரு சிலரே வெளியில் கசிய விட்டுள்ளார்களாம்.

விஜய் நடித்த படத்திற்கு இசையமைத்த பிறகு எங்கோ போய்விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஆண்டனி, அவர் பெயரில் விஜய் என்று இருப்பதாலேயோ என்னமோ விஜய் போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

கையில இருக்கிற இசையை வச்சி பிழைச்சிக்காம, நடிக்க ஆசைப்பட்டு…ம்ம்ம்…இது எங்கே போய் முடியுமோ என்கிறார்கள்…

Read Previous

‘கத்தி’யை மாற்ற விரும்பாத பட நிறுவனம்…

Read Next

மும்பையில் படமாகும் ‘ரோமியோ ஜுலியட்’

Most Popular