‘கத்தி’யை மாற்ற விரும்பாத பட நிறுவனம்…

kaththi seeman interview newsஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘கத்தி’ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்து வருவதால் அந்தப் படத்திற்கு தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் படத்தை அவர்களுக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு மாற்ற பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

அதன் பின் இது தொடர்பாக ‘கத்தி’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்ததாம். படத்தின் தயாரிப்பாளர் நாங்கள்தான், எங்களது படத்தை என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், அதை உருவாக்கிக் கொடுத்ததுடன் உங்களது வேலை முடிந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் கறாராக பேசி அனுப்பிவிட்டதாம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில்தான் தற்போது விஜய்யும், முருகதாஸும் இருக்கிறார்களாம். தீபாவளிக்கு எப்படியாவது படத்தை கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு எதிர்பார்ககாத ஒன்றாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

இதனால், ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது.

Read Previous

பணம் வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் – வசந்தபாலன் வேண்டுகோள்…

Read Next

சலீம் – சங்கடத்தில் சிக்கிய இயக்குனர்…