மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் “ ரோமியோ ஜூலியட் “ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, ஹன்சிகா, பூனம் பஜ்வா நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இமான் இசையமைக்க தாமரை, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள்.
இப்படத்திற்காக மும்பையில் ஜெயம்ரவி – ஹன்சிகா , பூனம் பஜ்வா பங்கேற்கும் ஒரு பாடல்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஜெயம் ரவி வில்லன்களுடன் மோதும் பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்றும் படமாகப்பட உள்ளது.
இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லட்சுமண்.