20,000 தியேட்டர்களில் ‘ஐ’ ரிலீஸ்…ஷங்கரின் புதிய சாதனை…

ai release newsதமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகமே ஆச்சரியத்தில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’.

விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஜுரம் இப்போதுதான் தமிழ் சினிமாவை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் ஹாலிவுட் நடிகர்கள் தலைமையில் இசை வெளியீடு, தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியீடு என கடந்த சில நாட்களாகவே படத்தைப் பற்றிய செய்தி பரவி வருகிறது.

இதனிடையே, ‘ஐ’ படத்தை உலகம் முழுவதும் உள்ள 20,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட ‘ஐ’ படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.  படத்தில் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய இந்திய மொழிகள் தவிர உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

சீனாவில் மட்டுமே 15,000 திரையரங்குகளில் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்களை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறாராம் ஷங்கர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக அமைந்துள்ளதாம்.

தமிழ்த் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே யாரும் இதுவரை நடிக்க முடியாத அளவிற்கு தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு நடித்துள்ளாராம் விக்ரம்.

இந்திய சினிமாவின் தரத்தை கண்டிப்பாக உயர்த்தும் ஒரு படமாக ‘ஐ’ இருக்கும் என்கிறார்கள்.

Read Previous

மும்பையில் படமாகும் ‘ரோமியோ ஜுலியட்’

Read Next

இமானை கன்னத்தில் கிள்ளி கொஞ்சிய பிரியா ஆனந்த்…