விமல், பிரியா ஆனந்த், சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இன்றைய இளம் நாயகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக பேசிக் கொண்டு வந்த போது, பிரியா ஆனந்த் பேச வந்தார். அவரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் பிரியா ஆனந்திடம் “உங்களுடைய ஆசை ஒன்று இருக்கிறதாமே, அதை இன்று நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று இயக்குனரிடமும் கேட்டீர்களாமே, ” என்று கேட்டார்.
அதற்கு பிரியா ஆனந்த், “ஆமாம். இசையமைப்பாளர் இமானின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச வேண்டும் ,” என இயக்குனரிடம் சொல்லியிருந்தேன் என்றார். அதைக் கேட்டதும் மேடையில் இருந்த இமான் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் பிரியா ஆனந்த் சிறிதும் தாமதிக்காமல், இமானிடம் சென்று அவருடைய கன்னத்தைக் கிள்ளி, “என் செல்லக் குட்டி, என் புஜ்ஜிக் குட்டி” எனக் கொஞ்சினார். ஒரு பக்கம் வெட்கமும், சிரிப்புமாக அதை ஏற்றுக் கொண்டார் இமான்.
பின்னர் பேச வந்த சிவகார்த்திகேயன், “அண்ணே இமான், அண்ணி கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க, எதிர்லதான் உட்கார்ந்திருக்காங்க,” என இமான் மனைவி விழாவுக்கு வந்திருப்பதை போட்டு உடைத்தார்.
ஏற்கெனவே, நடிகைகள் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோரைப் பாட வைத்துவிட்டார் இமான். அடுத்தது கண்டிப்பாக பிரியா ஆனந்த் தான்….