ஆதர்ஷ சித்ராலயா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் சத்ய பிரபாஸ் அறிமுக இயக்கத்தில், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் “யாகாவாராயினும் நா காக்க” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இப்பட நிறுவனம் அடுத்து, தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி வசூலைக் குவித்த “வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்” படத்தைத் தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான மறுபதிப்பு மற்றும் மொழிமாற்றம் (தமிழ்) உரிமைகளை எற்கனவே பெற்றுவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆதி முதன் முதலாக முழு நீள நகைச்சுவை படமான ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ படத்தின் தமிழாக்கத்தில் நடிக்கவுள்ளார். குடும்பப் பிண்ணனியில் நகைச்சுவை சேர்த்து வெளிவந்த ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் தமிழிலும் அனைத்து ரசிகர்களையும் கவரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.