ஜீ தமிழ் – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…

manja pai in zee tamil

ஜீ தமிழ் – தொலைக்காட்சியில் – தீபாவளி தினமான – அக்டோபர் 22, 2014, புதன் கிழமை – ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…

காலை 6 மணி – மங்கள இசை

கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் வழங்கும் பக்திப் பாடல்கள்

காலை 8.30 மணி – சிறப்புப் பட்டிமன்றம்

அவனி மாடசாமி தலைமையில் குடும்ப வாழ்க்கைக்கு வயதானவர்களும், இளைஞர்களும் எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பதைப் பற்றிய பட்டி மன்றம்

காலை 10 மணி – தீபாவளி தமாக்கா..

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் “ஒரு கை ஓசை, நெஞ்சத்தைக் கிள்ளாதே, காயத்ரி, சிவரகசியம், உயிர்மை” தொடரின் நட்சத்திரங்கள் பங்கு பெறும் கலகலப்பான நிகழ்ச்சி.

காலை 11 மணி – யாமிருக்க பயமே

டீகே இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில் கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி மற்றும் பலர் நடித்துள்ள கலகலப்பான பேய்ப் படம்…

பிற்பகல் 2 மணி – இது கதிர்வேலன் காதல்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை கலந்த காதல், குடும்பத் திரைப்படம்.

மாலை 5 மணி – மஞ்சப் பை

ராகவன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சுவாரசியமான, நெகிழ்ச்சியான திரைப்படம். உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் திரைப்படம்.

இரவு 8 மணி – ஜெய் ஹிந்த் – 2 ஸ்பெஷல்

அர்ஜுன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘ஜெய் ஹிந்த் 2’ படத்தைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி. அர்ஜுன், ஐஸ்வர்யா அர்ஜுன், கானா பாலா ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

Read Previous

விஜய் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…

Read Next

கத்தி – ‘செல்ஃபி புள்ள….’ பாடல் – வீடியோ…

Most Popular