விஜய் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…

vijay tv diwali 2014 programmes

விஜய் டிவியில், அக்டோபர் 22, 2014 – புதன் கிழமை, தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்களைப் பற்றிய விவரம்.

காலை 7 மணி – இன்றைய இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள்

நடிகர் சிவகுமார் வழங்கும் சொற்பொழிவு…

காலை 8.30 மணி – மாம்ஸ் தீபாவளி

நடிகை ப்ரியா மணி அவருடைய அம்மாவுடனும், நடிகை விஜயலட்சுமி அவருடைய அம்மாவுடனும் கலந்து கொள்ளும் மாறுபட்ட நிகழ்ச்சி…

காலை 9 மணி – விஜய் ஸ்டார்ஸ்

விஜய் டிவியின் பிரபல நட்சத்திரங்களான திவ்யதர்ஷினி, பாவ்னா, கோபி, குயிலி, செஃப் தாமு, தாடி பாலாஜி,  கல்யாணி, ரிஷிகேஷ், ஸ்டாலின், ரம்யா, மகேஸ்வரி, சூப்பர் சிங்கர் ஜுனியர் 4 குழுவினர், ஜோடி குழுவினர், அது இது எது குழுவினர் ஆகியோர் பங்கு பெறும் கலகலப்பான நிகழ்ச்சி…

காலை 11 மணி – மான் கராத்தே

திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வெளியான புத்தம் புதிய திரைப்படம். உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

பிற்பகல் 2.30 மணி – நான் சிகப்பு மனிதன்

திரு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம். இந்தப் படமும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

மாலை 5.30 மணி – காபி வித் டிடி

‘பூஜை’ படத்தின் நாயகன் விஷால், நாயகி ஸ்ருதிஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு பெறுகிறார்கள். அவர்களைப் பற்றியும், பூஜை பட அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாலை 6.30 மணி – ராஜா ராணி

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள படம். அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இரவு 10 மணி – தலை தீபாவளி

விஜய் டிவியின் நட்சத்திரங்களான சித்தார்த், கல்யாணி, ‘சால்சா’ மணி ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களது தலை தீபாவளிக் கொண்டாட்டத்தை விஜய் டிவியுடன் கொண்டாடுகிறார்கள்.

குறிப்பு – நிகழ்ச்சிகளும், ஒளிபரப்பு நேரங்களும் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை…

 

Read Previous

‘மூவி ஃபண்டிங்’ – தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி…

Read Next

ஜீ தமிழ் – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…