‘கத்தி’ – டீசர்…புதிய சாதனை…

kaththi teaser news‘கத்தி’ படத்திற்கு இதுவரை எந்த ஒரு டிரைலரும் வெளியிடப்படவில்லை என்றாலும் படத்தின் டீசருக்கே விஜய் ரசிகர்கள் அதிகப்படியான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

நேற்று வெளியிடப்பட்ட ‘ஆத்தி….’ பாடல் டீசர் ஒரே நாளில் யு டியூபில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே ஒரு லட்சத்தைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நேற்று இரவு ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. கடந்த ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே அந்த டீசரை சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மொத்தமாக ஒரே நாளில் கத்தியின் இரண்டு டீசர்களையும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஆனாலும், விஜய் ரசிகர்கள் ‘கத்தி’ படத்தின் முழுமையான டிரைலர் வெளியாகாதா என ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படி ஒரு டிரைலரை வெளியிடுவார்களா அல்லது டிரைலரே இல்லாமல் படம் வெளிவந்து விடுமா என்பது தெரியவில்லை…

Read Previous

சன் டிவியில் தீபாவளியன்று ‘ஜில்லா’…

Read Next

நாகார்ஜுனா – கார்த்தி இணையும் புதிய படம்…