தமிழில் ‘ ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள புதிய படத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான நாகார்ஜுனா, தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோவான கார்த்தி இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
இப்படத்தை தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த வம்சி இயக்க உள்ளார். தமிழில் இதற்கு முன் ‘ரட்சகன்’ என்ற நேரடி தமிழ்ப் படத்தில் மட்டும் நடித்திருந்தார் நாகார்ஜுனா. ஆனால், அவர் நடித்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட ‘உதயம், இதயத்தைத் திருடாதே, உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ ஆகிய படங்கள் தமிழிலும் வெற்றி பெற்றது.
இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகார்ஜுனா தமிழிலும், கார்த்தி முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்கப் போகிறார்கள்.
மற்ற கதாபாத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.