சன் டிவியில் ‘தல – தளபதி’…

thala-thalapathy-ajith-and-

தீபாவளிக்கு எந்தெந்த தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் என்பதை கடைசி நேரம் வரை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அந்த அளவிற்கு தற்போது சேனல்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை முன்னரே செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதோடு, காலை நேரத்தில் ‘அஞ்சான்’ படம் ஒளிபரப்பாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சற்று முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களைப் பற்றி அவர்களே அறிவித்துள்ளார்கள். அதன்படி இந்த வருட பொங்கலுக்கு பெரிய திரையில் வெளிவந்து போட்டியிட்ட ‘தல தளபதி’ படங்கள் இப்போது சின்னத் திரையிலும் போட்டியிட உள்ளன.

ஆம், தீபாவளியன்று மாலை 2 மணிக்கு அஜித் நடித்த ‘வீரம்’ படம் ஒளிபரப்பாக உள்ளது. “ஜில்லா, வீரம்” இரண்டு படங்களுமே இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த படங்களாகும்

காலை 10.30 மணிக்கு சூர்யா நடித்துள்ள ‘சிங்கம் 2’ படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ‘அஞ்சான்’ பட ஒளிபரப்பு இப்போதைக்கு இருக்காது என்றும் சின்னத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘தல தளபதி’ ரசிகர்களுக்கு இந்த தீபாவளியும் ‘போட்டி’க் கொண்டாட்டம்தான்…

 

Read Previous

‘செல்ஃபி புள்ள’யின் ஒரு நாள் சாதனை…

Read Next

கத்தி – டிரைலர்…