‘கத்தி’ படத்தின் இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு சாதனை புரிந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் ‘ஆத்தி…’ பாடல் டீசர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் டீசரும் வெளியிடப்பட்டது.
யு டியூபில், ‘ஆத்தி…’ டீசர் ஒரு நாளுக்குள்ளாகவே சுமார் 7 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது. ‘செல்ஃபி புள்ள….’ டீசரை ஒரு நாளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இரண்டு டீசர்களையும் இரண்டு நாளில் இதுவரை சுமார் 20 லட்சம் பார்வையார்கள் பார்வையிட்டுள்ளனர், இதுவும் ஒரு சாதனையாகும். ஒரு படத்தின் இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருப்பதற்கு விஜய் ரசிகர்கள்தான் காரணம்.
‘ஆத்தி…’ டீசரை இதுவரை 10,72,000 க்கும் மேற்பட்டவர்களும், ‘செல்ஃபி புள்ள…’ டீசரை இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்வையிட்டுள்ளனர்.
‘கத்தி’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…