ரகுவரன், பிரகாஷ் ராஜ் போல வரவேண்டும் – விநாயக் ராஜ்

actor vinayak rajயு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘சிகரம் தொடு’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்து அனைவரது பாராட்டையும் பெற்றது.

அந்தப் படத்தில் தன் எளிமையான மற்றும் யதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்றவர் நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ். பானவயலைச் சேர்ந்த இவர், புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கலையை முறையே பயின்றுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘இடம் பொருள் ஏவல்’, சீனு ராமசாமி இயக்கும் மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம், கமல்ஹாசன் உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும் பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘சிகரம் தொடு’ படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம் ஒரு வௌவாலை போல தொங்கி நடித்த காட்சியை மறக்கவே முடியாது என்கிறார். தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சியை நடித்ததாகவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழ் சினிமாவில், ஒரு ரகுவரனைப் போல், ஒரு பிரகாஷ்ராஜைப் போல், தாமும் ஒரு சிறந்த நவரச நடிகாராக வரவேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம் என்கிறார். கடவுள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தினாலும், சகோதரர்களின் உதவியினாலும் 2014ஆம் வருடத்தில் எனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது, 2015ஆம் வருடம் சினிமா என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்.

Read Previous

ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்…

Read Next

‘கத்தி’ – தீபாவளி ரிலீஸ் உறுதி – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு…