‘வானவில் வாழ்க்கை’ – இசை வெளியீடு…

vanavil vazhkai audio launchஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தியாவின் முதல் ‘இசை திரைப்படம்’ என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளது. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்களே அனைத்துப் பாடல்களையும் பாடி நடித்துள்ளனர்.
இயக்குனர் வசந்த் டிரைலரை வெளியிட்டார். ‘பசங்க’ புகழ் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ‘கோ’ ‘அங்காடி தெரு’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் பாடல்களை வெளியிட்டனர்.

“ஜேம்ஸ் வசந்தனை எனக்கு ஒரு இசையமைப்பாளராக மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களுக்கு நான் ரசிகன். ‘மெலோடி கிங்’ இவர் என்று வாழ்த்தி டிரைலரை வெளியிட்டார் இயக்குனர் வசந்த்.

“ஜேம்ஸ் சார் எனக்கு சினிமாவைப் பற்றி நிறைய சொல்லி கொடுத்தவர். படத்தின் தயாரிப்பு நேரம் மற்றும் அதன் செலவுகளை உணர்ந்தவர். என்னை ஒரு மியுசிக்கல் படம் செய்யச் சொன்னார். நான் அதிலிருந்து லாவகமாக விலகினேன். இன்று அத்தகைய ஒரு விஷயத்தை அவரே சாதித்துஙக காட்டியுள்ளார்,” என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.

“எனது நண்பன் RK பிரதாப் இப்படத்திற்கு நன்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திறமைமிக்க கலைஞன். இந்த வண்ணமயமான இளைஞர் குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன்.

“ எனது பல இயக்குனர் நண்பர்களை ஒரு மியுசிக்கல் ஃபிலிம் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பேன். இன்று அப்படிப்பட்ட ஒரு நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த திறமைமிக்க இளைஞர் பட்டாளம் எனக்கு இந்த படத்தை உருவாக்குவதில் பெரிதும் உதவினர். இப்படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள் ஓசியானா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தாருக்கு எனது நன்றிகள்,” என்று கூறினார் ஜேம்ஸ் வசந்தன்.

Read Previous

‘லிங்கா’ வசூலைக் கெடுத்த திருச்சி வினியோகஸ்தர் – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

Read Next

C 2 H – முதல் வெளியீடு தள்ளி வைப்பு…