விஜய்யை புகழ்ந்து தள்ளும் சோனம் பஜ்வா…

kappal heroine sonam bajwa2014ம் ஆண்டின் கடைசியில் ‘கப்பல்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சோனம் பஜ்வா நம்பிக்கை அளிக்கும் புதுமுகமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பஜ்வாவிற்கு முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு அவரை மிகவும் மகிழ வைத்திருக்கிறது. தனது முதல் பட அனுபவம் குறித்து அவர் கூறியதாவது,

“நான் பஞ்சாபை சேர்ந்தவள், எனக்கு பெரும்பாலும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் நண்பர்களாக இருக்கிறார்கள். நாடே போற்றும் ஒரு இயக்குனரான சங்கர் சாருடைய தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்தது எனக்கு மிக மிகப் பெருமையாக உள்ளது.

கப்பல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்த் திரை உலகின் தூண்களான விஜய் சார், விக்ரம் சார், ரகுமான் சார், ஷங்கர் சார் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.அவர்களது கனிவான் வார்த்தைகளும் , ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.

அதற்குப் பிறகு நான் விஜய் சாருக்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக, அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக அவர் இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன்.அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

‘கப்பல்’ படத்துக்குப் பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளி வரும். தற்போது மேலும் நிறைய தமிழ்ப் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன், என விஜய்யைப் பற்றி அதிகமாகவே புகழ்ந்து தள்ளுகிறார் சோனம் பாஜ்வா.

சோனம் பஜ்வாவுக்கு ஒரு விஜய் படம் பார்சேல்ல்ல்ல்…..

Read Previous

வேந்தர் டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

Read Next

அதர்வா – தி ஆரிஜின் – ஓர் அறிமுகம்