‘இது நம்ம ஆளு’ – சித்திரை வெளியீடு…

idhu namma aalu release newsசிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் சித்திரை மாதம், அதாவது ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘போடா போடி’ படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் படமும் வரவில்லை. தற்போது அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு படங்கள் வெளிவர உள்ளன.

‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் ‘என்னை அறிந்தால்’ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் பிப்ரவரி 5ம் தேதி முதல் திரையிடப்படுகிறது.

மூன்று ஆண்டு இடைவெளியை இந்த இரண்டு படங்களும் நிரப்பினால் சரி…

Read Previous

‘புறம்போக்கு’ டிரைலர் இந்த வாரம்…

Read Next

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால் ‘என்னை அறிந்தால்’…