பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால் ‘என்னை அறிந்தால்’…

gautham-menon-harris-jayaraj‘என்னை அறிந்தால்’ படத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இயக்குனர் கௌதம் மேனன், அஜித் முதல் முறையாக இணையும் படம். அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதும் முதல் முறை, அஜித்துடன் அனுஷ்கா ஜோடி சேருவதும் முதல் முறை, என பல ‘முதல்’ விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

அதோடு பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்துள்ள படமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. எண்ணற்ற மெலடி ஹிட்டுகளைக் கொடுத்துள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை, ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் கெளதம் மேனன்.

அதன் பின் இருவரும் இணைந்து “காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக் கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம்” ஆகிய படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிக்க வைத்தனர். முக்கியமாக ஹாரிஸின் வளர்ச்சிக்கு கௌதம்தான் காரணமாக இருந்தார்.

அதன் பின் இருவருக்கும் இடையே பிரச்சனை வர இருவரும் பிரிந்தார்கள். 2008ம் ஆண்டு பிரிந்தவர்கள் 6 வருடங்கள் கழித்து தற்போது ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, இப்படத்தின் பாடல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியானதும் படத்தின் பின்னணி இசையும் அதிகம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

‘இது நம்ம ஆளு’ – சித்திரை வெளியீடு…

Read Next

அஜித் மாதிரி அப்பா வேண்டும்…‘என்னை அறிந்தால்’ ரிப்போர்ட்…