‘என்னை அறிந்தால்’ திரைப்படம்தான் இந்த மாதத்தில் ஹைலைட் திரைப்படம். இது இந்த வருடத்தின் ஹைலைட் படமாக அமையுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
ஆனாலும், அப்படி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அஜித் படத்தை இளைஞர்கள்தான் அதிகம் கொண்டாடுவார்கள். அவர்களால் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கும்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு பெண்களின் ஏகோபித்த ஆதரவு படத்திற்குக் கிடைக்கும் என படத்தைப் பார்த்தவர்கள் ஒரு சில ரிப்போர்ட் சொல்கிறது.
அஜித் மாதிரி ஒரு அப்பா நமக்கு வேண்டும் என்று அனைத்துப் பெண்களும் நினைக்கும் அளவிற்கு அஜித்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
அஜித்தின் அட்டகாசமான ஆக்ஷனுடன், படம் பார்ப்பவர்களுக்கு இப் படம் ஒரு நெகிழ்ச்சியான உணர்வைத் தரும் என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள்.