பிரபு சாலமன் – தனுஷ் இணையும் புதிய படம்…

prabu solomon dhanush new movieசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சங்கமான முறையில் இப்படம் உருவாகிறது.

“மூன்றாம் பிறை, கிழக்குவாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன்” உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் – தனுஷ் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைய உள்ளார்கள். “மைனா, கும்கி, கயல்” படங்களுக்குப் பிறகு தமிழில் முக்கிய இயக்குனராகப் பெயரெடுத்துள்ள பிரபு சாலமனும், தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சாதித்து வரும் தனுஷும் முதல் முறையாக இணையப் போவதால் ஒரு நல்ல திரைப்படம் தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைக்கப் போகிறது என்பதை இப்போதே சொல்லலாம்.

தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணியாக இருக்கும், பிரபு சாலமன், டி. இமான் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

ஜி. சரவணன் மற்றும் செல்வி தியாகராஜன் இணை தயாரிப்பாளர்களாக இருக்கும் இந்தப் படத்திற்கு வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், தாஸ் படத்தொகுப்பைக் கவனித்துக் கொள்ள, ராகுல் நிர்வாகத் தயாரிப்பு செய்கிறார்.

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

அஜித் மாதிரி அப்பா வேண்டும்…‘என்னை அறிந்தால்’ ரிப்போர்ட்…

Read Next

‘தாரை தப்பட்டை’ ஷுட்டிங்கில் இளையராஜா…

Most Popular