‘எனக்குள் ஒருவன்’ – எதிர்பார்ப்பில் சித்தார்த்…

enakkul oruvan siddarth deepa sannidhi newsஎந்த ஒரு ஹீரோவுமே வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடும் போது அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் நடிக்கும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைப்பார்கள்.

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழில் 9 படங்களிலும், தெலுங்கில் 13 படங்களிலும், ஹிந்தியில் மூன்று படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். மார்ச் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ள ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் சித்தார்த்தின் 25வது படம்.

இந்த 25 வருடங்களில் சித்தார்த் தமிழில் நடித்துள்ளது ஒன்பதே ஒன்பது படங்கள்தான். இருந்தாலும் தமிழில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் சேராமலே இருக்கிறார்.

‘எனக்குள் ஒருவன்’ படம் அவரைப் பற்றிய பார்வையை மாற்றும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார் சித்தார்த்.

“எம்.பி.ஏ படிச்சி முடிச்சிட்டு லட்ச ரூபாய் சம்பளத்தோட நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலைய வேண்டாம்னு சொல்லிட்டு வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்பா, ஏன்னு கேட்டாரு. ஒரே மாதிரி வேலைய செய்யறது போரடிக்குதுப்பான்னு சொன்னேன்.

இந்த 12 வருஷத்துல 25 படங்கள்தான் நடிச்சிக்கேன். பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சிருந்தால், இன்னுமும் பாரின்ல யாராவது ஒருத்தருக்கு பூ கொடுக்கிற கதையிலதான் நடிச்சிட்டிருந்திருக்கணும். எனக்கு வித்தியாசமான கதைகள்ல நடிக்கிறதுதான் பிடிக்கும்.

கன்னடத்துல ‘லூசியா’ன்னு ஒரு படம் வெளியாகி ஹிட் ஆகி அந்தப் படத்தை தமிழ்ல சி.விகுமார், தயாரிக்கப் போகிறார்னு கேள்விப்பட்டதுமே அவரைப் போய்ப் பார்த்து நான் அந்தப் படத்துல நடிக்கிறன்னு கேட்டேன்.

enakkul oruvan release newsஇந்தப் படத்துக்காக கருப்பா மாறினதுலாம் பெரிய விஷயமேயில்லைங்க. சிக்ஸ் பேக் வைக்கிறதுக்குக் கூட தொடர்ந்து எக்சர்சைஸ் பண்ணா வந்துடப் போகுது. அதையும் மீறி நாம நல்லா நடிச்சிருக்கோமான்னுதான் பார்ப்பாங்க.

இந்தப் படத்தைக் கூட ஏன் வேர்ல்ட் கப் நடக்கும் போதும், எக்சாம் சமயத்துலயும் ரிலீஸ் பண்றீங்கன்னு கேட்டாங்க. எங்க படத்துக்கு முன்னாடிலாம் பெரிய படம் வருது, அந்த நம்பிக்கையில எங்க படத்தையும் ரிலீஸ் பண்றோம். இந்தப் படம் ஹிட்டான பிறகு அடுத்த வருஷத்துல இருந்து மார்ச் மாசம் வந்த ‘எனக்குள் ஒருவன்’ ஜெயிச்சுது இல்லை, அதே மாதிரி ரிலீஸ் பண்றோம்னு சொல்வாங்க, பாருங்க.

இந்தப் படத்தை அப்படியே ரீமேக் பண்ணாம சில பல மாற்றங்களை செய்துதான் எடுத்திருக்கோம். ஆனால், கதைக் கருவை எந்த விதத்துலயும் சிதைக்காம ரொம்ப இன்டிரஸ்டிங்கா கொடுத்திருக்கோம்,” என்றார்.

இந்தப் படத்தை இயக்கும் பிரசாத், கார்த்திக் சுப்புராஜிடம் பணியாற்றியவர். “ரசிகர்கள் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையும், இந்தப் படத்தை நாங்க எடுத்திருக்க விதமும் நிச்சயமா இந்தப் படத்தைப் பத்தி பேசவும் வைக்கும், வெற்றியும் கொடுக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இந்தப் படம் மூலம் தீபா சன்னிதி, தமிழில்  நாயகியாக அறிமுகமாகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தின் தமிழ் ரீமேக்கில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடக்கும் என்கிறார்.

‘எனக்குள் ஒருவர்’ மார்ச மாதம் 6ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்…?

Read Next

செல்வராகவன் முதுகில் குத்திய 325 பேர்…