ரசிகர்களின் நம்பிக்கையை ‘நண்பேன்டா’ காப்பாற்றும்…

ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடிக்கும் ‘நண்பேன்டா’ படம் ஏப்ரல் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெகதீஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாலசுப்பிரமணியம் என ஒரு வெயிட்டான டீமுடன் களம் இறங்கியிருக்கிறார்.

தன்னுடைய குருநாதர் ராஜேஷ் படம் போலவே இந்தப் படத்தை அவருடைய உதவியாளராக ஜெகதீஷ் இயக்கியருப்பார் என தாராளமாக எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜெகதீஷை தன் கம்பெனியிலேயே இயக்குனராக அறிமுகம் செய்து படத்தைத் தயாரித்து நாயகனாக நடிப்பாரா உதயநிதி. அவ்வளவு நம்பிக்கையை அவர் இயக்குனர் மீது வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் அளவிற்கு இயக்குனரும் ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் என உதயநிதியே பாராட்டுகிறார்.

படத்திற்கு ‘நண்பேன்டா’ என பெயரை வைத்தாலும் படத்தில் அந்தத் தலைப்பு யாரையும் குறிப்பிடவில்லை என்கிறார்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவும் அப்படிப்பட்ட தலைப்பை வைக்கவில்லயாம். படத்தில் காதலுக்கும் நகைச்சுவைக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மற்ற ஹீரோக்களே பொறமைப்படும் அளவிற்கு உதயநிதி டான்ஸ் ஆடியிருக்கிறார் என்கிறார் இயக்குனர் ஜெகதீஷ். ஆக்ஷன் ஹீரோவாகவெல்லாம் இப்போதைக்கு நடிக்கும் எண்ணமில்லை, அப்படியே நகைச்சுவை கலந்த கலகலப்பான நடிப்பில் மக்களைக் கவரும் விதத்தில் படங்களில் நடிக்கத்தான் ஆசை என்கிறார் உதயநிதி.

அடுத்து நடிக்கும் ‘கெத்து, இதயம் முரளி’ ஆகிய படங்களில் சந்தானம் இல்லாமல் தனியாக களம் இறங்குகிறாராம். அவருடன் கொஞ்சம் இடைவெளி விடலாம் என்பதால்தான் அந்த முடிவாம், மற்றபடி இருவருக்குள்ளும் மீடியாக்களில் வருவது போல் எந்தப் பிரச்சனையும் இல்லை, காலையில் கூட என்னுடன் தொலைபேசியில் பேசினார் என்கிறார்.

இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன், அனைவரும் வந்து ரசிக்கும்படியான ஒரு படமாக நிச்சயம் ‘நண்பேன்டா’ கண்டிப்பாக இருக்கும் என கோரஸாக சொல்கிறார்கள் இயக்குனர் ஜெகதீஷும், உதயநிதி ஸ்டாலினும்.

 

Read Previous

36 Vayadhinile – Teaser

Read Next

Purampokku – Trailer

Most Popular