த்ரிஷாவுக்குப் பதிலாக டாப்ஸீ…

‘தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்’ படங்களை இயக்கிய திரு அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டது. த்ரிஷாவின் வருங்காலக் கணவரான வருண் மணியன்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் த்ரிஷாவுக்குப் பதிலாக டாப்ஸீ நடிக்க உள்ளார் என்று அறிவித்துள்ளார்கள். த்ரிஷாவிற்கு தெலுங்கிலும், தமிலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் த்ரிஷா இந்தப் படத்திலிருந்து விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. த்ரிஷாவின் வருங்காலக் கணவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் நாயகியை மாற்றும் விஷயம் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பில்லை. படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம்.

விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

அஜித் புதிய படம் இன்று ஆரம்பம்…

Read Next

‘அப்பா டக்கர்’ படத்திற்காக பாடிய சிம்பு