ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் சிம்பு. ஏ.ஆர்.ரகுமான், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், தமன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஏதாவது வித்தியாசமான பாடல் என்றாலோ, குத்துப் பாடல் என்றாலோ சிம்புவை அழைத்து ஒரு பாடலைப் பாட வைப்பார்கள்.
சமீபத்தில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் கூட கார்த்திக் ராஜா இசையில் சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இப்போது தமன் இசையமைப்பில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் ‘அப்பா டக்கர்’ படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
“குத்து சாங்மா நீ, ஹிட்டு சாங்மா நீ…’ என்ற குத்துப் பாடலை சமீபத்தில் தமன் இசையமைக்க பாடிக் கொடுத்தார். இப்படத்தின் பாடல்கள் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.