பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கோ 2’…

பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சரத் இயக்க உள்ளார்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது,

“எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு படத்தின் அடுத்த பாகம் என்றால் அதே நடிகர்கள், அதே குழு இருக்க வேண்டும் என்றில்லாமல், அந்தக் கதை, தலைப்புக்கு ஏற்றவாறு வேறு ஒரு கதையை யோசித்தோம். அதுவே ‘கோ 2’ ஆக தயாராக உள்ளது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி ஆகியோருடன் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படமும் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்,” என அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக பிரகாஷ்ராஜ் தமிழில் அதிகப்படங்களில் நடிப்பதில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

டிவி சேனல்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவிப்பு…

Read Next

‘நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க’…