‘நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க’…

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் திரைப்படம் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ .

அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன், சிங்கமுத்து , சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

“ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறும் படமே இந்தப் படம். நம்முடைய எல்லா நல்லது கெட்டதையும் பற்றி நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை மையமாக வைத்து,  சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு  நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்களும், நண்பர்கள் என  எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா பேசி தான் பாராட்டியிருக்காங்க. இந்தப்படம் ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்,” என்கிறார் அறிமுக இயக்குனர் மாதவன்.

D.S.வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார்.

இப் படம் விரைவில் வெளியாக உள்ளது

Read Previous

பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கோ 2’…

Read Next

ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்