விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ வரும் நவம்பர் 17, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48 அணிகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஆறு அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று அணிககள் தேர்வு செய்யப்படும்.
ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும்.
அணிகள் ஆடும் நடனத்திற்கு, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மதிப்பெண்களை வழங்குவர். போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் டான்சிங் சூப்பர் ஸ்டார் அணிக்கு ரூபாய் 25 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
ரியோ ராஜ், ஆன்ட்ரூஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.
சாண்டி, டிடி, மஹத், ஆல்யா மானசா, சுனிதா ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்கள்.