விரைவில் ‘ஜெயில்’ முதல் பாடல்…

“ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்” ஆகிய படங்களுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் ‘ஜெயில்’.

‘வெயில்’ படத்தில் வசந்தபாலனால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். 

அபர்ணதி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை உரிமையை சோனி மியுசிக் நிறுவனம் வாங்கி உள்ளது.

“விரைவில் ஜெயில் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளிவரும்…….மாலை வெயிலின் நம்பிக்கை ஒளி என் பால்வெளியில் பரவுகிறது,” என படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Read Previous

சிவாஜி கணேசன், பத்மினி இணைந்த படங்கள்

Read Next

சிவாஜி கணேசன், சாவித்ரி இணைந்த படங்கள்

Most Popular