தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்த ‘பொல்லாதவன்’ படம் மூலம்தான் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் கதிரேசன் தயாரித்த ‘ஆடுகளம்’ படத்தையும் வெற்றிமாறன் இயக்கினார்.
இப்போது இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது.
இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
வெற்றிமாறன் அவருடைய தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் ‘உதயம், காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை’ ஆகிய படங்களை ஏற்கெனவே தயாரித்துள்ளார்.
கதிரேசன் தற்போது ‘டைரி’ படத்தைத் தயாரித்து முடித்துள்ளார். இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அடுத்து ‘ருத்ரன்’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
அவர் 8வதாகத் தயாரிக்கும் படத்தில்தான் வெற்றி மாறனும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் மற்ற நடிகர்கள், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.
படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2021 பொங்லுக்குப் பின் தொடங்க உள்ளது.