ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ – துவக்கி வைத்த சிரஞ்சீவி

தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான ரவி தேஜா, பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்  வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான  ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின்  ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது.

‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் இக்கூட்டணியின் மிகப் பிரம்மாண்டமான இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. 

உகாதியை  முன்னிட்டு இப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார்,

பின்னால் அதிவேகமாக ரயில் வந்துகொண்டிருக்க, உயிரை துச்சமாக மதித்து கையில் சாட்டையுடன் ரவி தேஜா நின்று கொண்டிருக்கும் காட்சி பிரமிப்பை உண்டாக்குகிறது.  ரவி தேஜா சட்டையின்றி நின்று தனது கம்பீரமான உடலைக் காட்டிக்கொண்டு  நிற்பது அவர் ஏதோ அதிரடியான ஆக்‌ஷனில் இறங்கக் காத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையுடன் மோஷன் போஸ்டரும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. 

இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர்  நடிக்கின்றனர்.

’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று மாதப்பூர், எச்ஐசிசியில் உள்ள நோவடெல்லில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்கிறார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

Read Previous

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’

Read Next

பூ சாண்டி வரான்- விமர்சனம்

Most Popular