ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’

ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அத்துடன் படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்பட உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வம்சி இயக்கும் இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்.

‘டைகர் ’நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா, உகாதி தினமான ஏப்ரல் 2-ஆம் தேதியன்று மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி என்னுமிடத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ‘டைகர்’ படத்தின் பிரீ லுக் நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படுகிறது. 

‘டைகர்’ நாகேஸ்வரராவ்’ 1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட மோசமான மற்றும் துணிச்சல்மிக்க ஒரு திருடன். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட திரைப்படம். ஆற்றல் மிக்க இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவிதேஜா தன்னுடைய தோற்றத்தை முழுமையாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, தோற்றப்பொலிவு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு முன் ரவி தேஜா ஏற்றிராத கதாபாத்திரம் இது.

’டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் திரைக்கதையை ஆய்வுகளுக்கு பிறகு முழுமையாக எழுதி நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் வம்சி. அவருடைய கனவுப் படைப்பான இப்படத்தை தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. இதற்காகவும் இயக்குநர் வம்சி பிரத்யேகமாக உழைத்திருக்கிறார்.

‘டைகர்’ நாகேஸ்வரராவின் வாழ்க்கைக் கதை, ஒரு திரைப்படத்திற்கான முழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இது போன்ற வெகுஜன மக்களைக் கவரும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ரவி தேஜா பொருத்தமானவர் என்பதால் அவரை இப்படத்திற்காகத் தேர்வு செய்துள்ளார்கள்.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 70-களில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் உருவாக்கத்தில் பிரபலமான தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா பணியாற்ற, படத்திற்கான வசனங்களை ஸ்ரீகாந்த் விஸ்ஸா எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

‘டாணாக்காரன்’ எனது திறமையை வெளிப்படுத்தும், விக்ரம் பிரபு நம்பிக்கை

Read Next

ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ – துவக்கி வைத்த சிரஞ்சீவி