‘திருவின் குரல்’, ரொம்ப எமோஷனலான ஒரு படம் – அருள்நிதி

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘திருவின் குரல்’. இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு கதாபாத்திரத்தில் கோபக்கார இளைஞனாக நடித்துள்ளார் அருள்நிதி.

படத்தைப் பற்றி அவர் கூறுகையில்,

“த்ரில்லர் கதைகளில்தான் அதிகம் நடித்துள்ளேன். பாதையை மாற்றி நடிக்கலாம் என நினைத்த போது இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஹரிஷ் பிரபு சொன்னார். நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரமும், கதையும், அதிகமான எமோஷனல் காட்சிகளும் இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.

அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாத பலர் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே வேலை செய்யும் சிலருக்கும், வாய் பேச இயலாத எனக்கும் நடக்கும் ஈகோ தான் இந்தப் படத்தின் கதை. எனது அப்பாவாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். எனது அத்தை மகளாக ஆத்மிகா நடித்திருக்கிறார்.

இது அரசு மருத்துவமனைகளைக் குறை சொல்லி எடுக்கப்பட்டுள்ள படம் கிடையாது. அங்குள்ள சிலர் செய்யும் செயல்கள் சராசரி மனதர்களை கோப்படுத்தும் விதமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களைப் பற்றி சொல்லும் படம்தான் இது. மிகவும் யதார்த்தமான ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களுடன் சேர்ந்து நடித்தது பெருமையாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. போகப் போக அது சரியாகிவிட்டது. அவரது மகன் போல நான் மாறிவிட்டேன் என இயக்குனரிடம் என்னைப் பற்றி சொல்யிருக்கிறார்.

அடுத்ததாக ‘கழுவேர்த்தி மூர்க்கன், டிமான்டி காலனி 2,’ மற்றும் இன்னாசி பாண்டியன் இயக்கும் படம், விஜய் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ள படம ஆகியவற்றில் நடிக்கிறேன்,” என்றார் அருள்நிதி.

Read Previous

பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ!

Read Next

”எல்.ஜி.எம்” பர்ஸ்ட் லுக்கை பாராட்டிய எம் எஸ் தோனி!