திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய்

திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திருக்குமரன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அவருடைய ஆஸ்தான உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கெத்து’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸிடமே பணிபுரிந்து வந்தார். தற்போது தனது அடுத்தப் படத்தினை இயக்க தயாராகி வருகிறார். இவர் எழுதிய கதையில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

திருக்குமரன் – அருண் விஜய் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

நெல்சனிடம் ரன்வீர் சிங் பேச்சுவார்த்தை

Read Next

சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன் – காடுவெட்டி விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி