நேரடி ஓடிடி வெளியீட்டில் ‘டெஸ்ட்’

திரையரங்கில் அல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது ‘டெஸ்ட்’ திரைப்படம்.

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘டெஸ்ட்’. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து இயக்கியுள்ளார் சசிகாந்த். முதலில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையினை கைப்பற்றியது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.

தற்போது மேலும் முதலீடு செய்து, ‘டெஸ்ட்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டிற்கு கைப்பற்றி இருக்கிறது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் மாதவன், சித்தார்த், நயன்தாரா என முன்னணி நடிகர்கள் நடித்தும் நேரடி ஓடிடி வழியை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு.

போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளது படக்குழு. டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்ட அனைத்துமே ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தினால் முடிவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது.

Read Previous

”சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” நகைச்சுவாக்காக மட்டுமே – வைபவ்

Read Next

பிரபாஸ் குறித்து சர்ச்சைக் கருத்து: சிக்கலில் பாலிவுட் நடிகர்