விஜய் டிவியில், இனி மதிய நேரங்களிலும் புத்தம் புதிய தொடரக்ள் ஒளிபரப்பாக உள்ளன.
வரும் பிப்ரவரி 26 முதல் ‘அவளும் நானும்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.
‘அவளும் நானும்’, தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளைப் பற்றிய ஒரு தொடர்.
நிலாவின் திருமணம் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. பிரவீன் பணக்கார வீட்டைச் சேர்ந்த பையன். ஆனால், நிலா வேறொருவரை விரும்புகிறார், இருந்தும் தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போகிறது. திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
குடும்பப் பெயரைக் காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். நிலாவாக திருமணம் செய்து போகும் தியாவின் வாழ்கை என்ன ஆகிறது ?, பெற்றோர்களை மீறிச் செல்லும் நிலாவின் வாழ்கை என்ன ஆகிறது ?. உருவங்கள் இடம் மாறிய வாழ்கை தடம் மாறியது, என்பதே இந்தக் கதையின் முக்கிய கரு.
இத் தொடரை தனுஷ் இயக்கியுள்ளார். நடிகை மௌனிகா இந்த தொடரின் இரட்டை சகோதரிகள் நிலா மற்றும் தியாவாக நடிக்கிறார். மௌனிகா இந்தத் தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். ப்ரவீனாக அம்ருத் நடிக்கிறார்.
விஜய் டியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு ‘அவளும் நானும்’ ஒளிபரப்பாக உள்ளது.
மதியம் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு தொடர் ‘பொன்மகள் வந்தாள்’.
சிறிய நகரத்தைச் சேர்ந்த பெண் ரோகிணி. அன்பான பெற்றோர், அழகான சகோதரிகள் என சந்தோஷமான குடும்பம். பணத்தால் இல்லாவிட்டாலும் மனதால் உயர்ந்தவர்கள். ரோகினியின் தந்தை வேலை இழந்துவிடுகிறார். அக்காவின் திருமணம், தங்கையின் படிப்பு என பல கடமைகள் காரணமாக நகரத்துக்கு வருகிறாள் ரோகிணி. தன் குடும்பத்தினருக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.
ரசூல் இயக்கும் இத் தொடரில் ரோகிணியாக ஆயிஷா அறிமுகமாகிறார். விக்கி இந்தத் தொடரின் நாயகனாக நடிக்கிறார்.
‘பொன் மகள் வந்தாள்’ தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.