நடன ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நடனக் கலைஞர்களுக்கு அவர்களது திறமைகளைக் காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்து வருகிறது.
‘கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2’ இறுதிச் சுற்று நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 25, ஞாயிறு அன்று, மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இறுதிச் சுற்று போட்டியில் 8 நடன சூறாவளிகள் அஸ்வின் ஸ்காட், யோபு & மெர்சினா, ADS கிட்ஸ், O 2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் & ப்ரின்சி மற்றும் வேலம்மாள் கிட்ஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களது தனித்துவ நடனத் திறமையைக் காட்டி டைட்டிலை வெல்ல முழு முயற்சியிட்டு போட்டியிட்டுள்ளார்கள்.
ஒரு இடைவேளைக்குப் பிறகு தொகுப்பாளினி ரம்யா இந்த நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றை தொகுத்து வழங்குகிறார்.
இறுதிச் சுற்றில் நட்சத்திரங்கள் பலர் வருகை தந்தனர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், தொகுப்பாளினி DD & நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் பிந்து மாதவி ஆகியோர் வந்து சிறப்பித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்தினார். சிறப்பு நடன விருந்தாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடனமாடி பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் உற்சாகப்படுத்தினார்.
இந்த நடன திறமையாளர்களை மேலும் மெருகேத்த இந்த நிகழ்ச்சி முழுவதும் மூன்று கேப்டன்கள் உள்ளனர். சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர் ஆகியோர் மூன்று கேப்டன்கள் ஆக இருக்கின்றனர்.
ராஜு சுந்தரம் இந்த நிகழ்ச்சியின் நடுவர் ஆக உள்ளார். டான்ஸ் மேடையில் போட்டியாளர்கள் செய்யும் நடனங்களுக்கு வெளிப்படையாக, அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து கமெண்ட்ஸ் வழங்கி வாழ்த்தினார்.
இந்த பிரமாண்ட நடன மேடையில் யாருக்கு அந்த மகுடம் கிடைக்கப் போகிறது என்பதை வரும் ஞாயிறு, பிப்ரவரி 25ம் தேதி மதியம் 3 மணிக்கு பாருங்கள்.