அக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.

அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலர் தற்போது பின்னணிப் பாடகர்கள், பாடகிகளாக வளர்ந்து பிரபலம் ஆகியுள்ளனர்.

இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 6 வரும் அக்டோபர் 20ம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த முறை இந்த நிகழ்ச்சி இன்னும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீசன் நடுவர்களாக சித்ரா, சங்கர் மகாதேவன், எஸ்பிபி சரண், கல்பனா ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள்.

முதல் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா சிறப்பு விருந்தினராக ‘காற்றின் மொழி’ படக்குழுவினருடன் பங்கேற்கிறார்.

இந்த சீசனில் பல புதுமையான விஷயங்களைச் சேர்க்க உள்ளார்களாம். தமிழகத்தின் செல்லக் குரலுடக்கான தேடல் விரைவில் உங்கள் இல்லங்களிலும் ஒளி,ஒலிக்க இருக்கிறது.

Read Previous

வடசென்னை – விமர்சனம்

Read Next

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்

Most Popular