உலகில் எண்ணற்ற மனிதர்கள் இருந்தாலும் உருவத்தால் வேறு வேறாக இருப்பது கடவுள் தந்த சிறப்பு. எனினும் பெற்றோர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் முக ஜாடையிலோ, அல்லது அவர்களது செயல்பாடுகளிலோ ஏதேனும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த ஒற்றுமையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ‘ஜீன்ஸ்’ கேம் ஷோ.
புதுமையான நிகழ்ச்சிகளை மக்களிடையே கொண்டு செல்லும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மற்றுமொரு மாறுபட்ட தயாரிப்பு. இது ஒவ்வொரு தமிழனின் அடையாளம். அந்த அடையாளத்தை கண்டுபிடிக்கப்போவது தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள். முற்றிலும் மாறுபட்ட நான்கு சுற்றுகளைக் கொண்டது இந்த ‘ஜீன்ஸ்’ நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியில், தமிழ்த் திரையுலகின் ‘மாஸ்’ பிரதர்ஸ் வெங்கட் பிரபு – பிரேம்ஜி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பிரபல சினிமா பிரபலங்களான சங்கீதா, நந்திதா, மீனா, ரோஜா, ராம்கி, நிரோஷா ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.
இந்நிகச்ச்சியின் சிறப்பு என்னவென்றால், வீட்டில் இருந்து நிகழ்ச்சியினை ரசிக்கும் நேயர்களும் விளையாடும் விதத்தில் ஒவ்வொரு சுற்றும் அமைந்துள்ளது.
இந்த புத்தம் புதிய கேம்ஷோ, ஏப்ரல் 19 முதல், ஒவ்வொரு ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.