உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் டர்பனில் விஜய் டிவியின் விஜய் ஸ்டார் நைட் நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நகரமான டர்பனில் டர்பன் ICC என்னும் இடத்தில் அந்த விழா நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர கொண்டாட்டம் இன்று, ஞாயிறு காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ரக்ஷிதா, மாளவிகா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் அனிருத் ஆகியோரின் இசை விருந்து இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. அவர்களுடன் ஷங்கர் மஹாதேவனும் இசை விருந்தளிக்க உள்ளார். மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மியும் இசை விருந்தளிக்க உள்ளனர்.
பிக் பாஸ் நட்சத்திரங்கள் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடனமாட உள்ளனர். டான்ஸ் மாஸ்டர் சாண்டி சிரிக்க மற்றும் ரசிக்க வைக்கும் நடனத்தை ஆடுகிறார்.
மகாபா ஆனந்த், இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஜோடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் மற்றும் நெஞ்சமே மறப்பதில்லை புகழ் சரண்யா இணைத்து ஒரு கண்கவர் நடனத்தை ஆடுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ரா ஜோடி புகழ் லோகேஷுடன் ஒரு கண் கவர் நடனத்தை ஆடுகிறார்.
மௌனராகம் புகழ் ஷக்தி மற்றும் கலக்க போவது யாரு புகழ் அசார் ஒரு நிகழ்ச்சியை அளிக்கவுள்ளனர். இந்த முறை க்ரித்திகாவின் பாடல் மட்டுமின்றி ஆடலையும் பார்க்கலாம். அதே போல அசாரின் நகைச்சுவை மட்டுமின்றி நடனத்தையும் காணத் தயாராகுங்க